பூவாகும் காவியம் - உதயா

சொல்ல தவிக்கும் காதல்
மெல்ல தயங்கும் கால்கள்
மனமெல்லாம் நீ தானே
உன் நினைவெல்லாம்
என் உயிர்தானே

பல காலம் நான் தானே
உன் பின்னாலே அலைந்தேனே
காதலை நீ சொல்லிவிட்டால்
நான் பூவோடு மணம்தானே

அடி
கண்ணோடு இமையாக
வானோடு நிலவாக
பாவை நீ பார்த்தாலே
உன் நாவொடு நான்
உமிழ் நீராவேன்

இரவோடு பகல் சேர்த்து
காதலுக்கு உயிர்க்கொடுப்பேன்
என் இதயத்தில் உனைவைத்தே
உன் நினைவிற்கு உணர்வளிப்பேன்

மரமோடு கிளையாக
வாழ்வில் நீ துணையாக
காலங்கள் கடந்து சென்றும்
பிரியாத இணையாக
வாழ்வினை நாம் வாழ்ந்திடுவே
வாழுறேன்டி உன் பதிலுக்காக

காவியங்கள் பூவாக
ஓவியங்கள் நூலாக
மாலையென நான் தொடுத்தே
மங்கை உன்னை அலங்கரிக்க
காதல் கொண்ட விழியாலே
எனை கண்ணெடுத்து பார்த்துடுவாய்

கவிதைகளோ உன் கண்ணாக
வார்த்தைகளோ என் உயிராக
காகிதங்கள் பசியாற
அடி பெண்ணே
நீ கண்ணசிப்பாய்.........

எழுதியவர் : udayakumar (20-Jan-15, 7:22 pm)
பார்வை : 81

மேலே