பொட்டல் காட்டு அய்யனார்

அன்றொறு நாள் தூரத்தில் சாலை ஓரம் கம்பீரமாக விழுதுகளுடன் வளர்ந்து நிற்கும் ஆலமரத்தின்
மகிழ்ச்சியை ஏக்கத்துடன் பார்த்த பொட்டல் காட்டு அய்யனார்...

" நெடுந்தூர பயணத்தின் அழுக்கையில் கட்டிச் சென்ற சோற்றை அவிழ்த்து பட்டை ஊறுகாயுடன் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டு சந்தோசங்களை பரிமாற்றம் செய்து இளைப்பாறிய வழிபோக்கர்கள்...

கூட்டமாய பறந்து வந்து கிளைகளில் அமர்ந்து கூவி கவி பாடி பழங்களை கொரித்துப் போட்ட பறவைகள்....

விடுமுறை நாட்களில் விழுதுகளை ஊஞ்சலாக்கி ஆடி மகிழ்ந்த சிறுவர்கள்...

வாரம் ஒருமுறை கூடும் சந்தையில் கிளைதனில் கட்டப்பட்டு சத்தமாக பாடும் குழாய் ஒலிபெருக்கிகள்..."

வேகமான வாழ்க்கையில் கூட்டத்தை இழந்த ஆலமரம் வரும் நெடுஞ்சாலை பணிக்காக வெட்டப்பட...

அய்யனார் அதே இடத்தில் தனிமையில் மீண்டும் ஒரு முறை ஆலமரத்தை மகிழ்ச்சியான கூட்டத்துடன் பார்க்கும் ஏக்கத்துடன்...

எழுதியவர் : இராமதுரை ஜெயராமன் (22-Jan-15, 4:07 am)
சேர்த்தது : ராமதுரை ஜெ
பார்வை : 49

மேலே