இலண்டன் தமிழ்ச் சங்கம் - பொங்கல் விழா வாழ்த்து

சென்ற 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஓர் நாள் இலண்டன் நகருக்கு அருகிலுள்ள East Ham என்ற இடத்திலுள்ள மகாலட்சுமி கோயில், முருகன் கோயில் மற்றும் தமிழ்ச் சங்கம் சென்றிருந்தேன். அங்கு தமிழ்ச் சங்க வாசகசாலைக்கு, 2014 மார்ச் மாதம் புதுச்சேரியில் வெளியிட்ட எனது 'வகுப்பறையில் வண்ணத்துப் பூச்சிகள்' என்ற கவிதைப் புத்தகத்தை அளித்தேன்.
அதன்பின் ஒரு நாள் அங்குள்ள தமிழன்பர்களுக்கு 'கண் மருத்துவ நலம்' என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். நான் இயல்பாக பேசி கருத்தளித்ததற்கு மகிழ்ந்து வாழ்த்தினார்கள்.
மறவாமல் எனக்கு இன்றும் 'பொங்கல் விழா' அழைப்பை அனுப்பியிருந்தார்கள். நேரில் செல்ல இயலாவிட்டாலும், எனது வாழ்த்தை வெண்பா வடிவில் அனுப்பி வைத்தேன்.
இரு விகற்ப நேரிசை வெண்பா
இலண்டன் தமிழ்ச்சங்க இன்பொங்கல் நன்னாள்
கலகலப்பாய் நன்றே கனிந்து - திலகமே
போல விழாதிகழ வாழ்த்துகிறேன்; வெற்றிதான்
வேலன் துணையிருப்பான் நன்று!