இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளடா
ஒரு நூறு ஒன்பது பத்து மூன்று தேசம் கொண்ட-இப்பாரினிலே
எம் தேசம் பாரதம் என்று பண்டைய நாளிலும்
இந்தியா என்று இந்நாளும் அறியப்படும்.
ஒரு நூறு இருபத்து கோடி மக்களும்,
எழுநூறு எண் பத்து மொழிகளும்,
ஒரு பத்து மதங்களும்,
இரு பத்து ஒன்பது மா நிலங்களும்,
கொண்டாலும் - நாங்கள்
மூவண்ண கொடி கண்டால்
ஒற்றை சொல்லே உதிர்ப்போம்
வந்தே மாதரம் எங்கள் தாரக மந்திரம்.
இப்பூமி நிலத்தினிலே கடந்த
லட்ச வருடத்திலே - தன்
எல்லை
தாண்டா தேசம் - என்
பாரத தேசம்.
பகையாளிக்கும் விருந்தளிக்கும்
பண்புகொண்ட
தேசம்
என் பாரத தேசம்
சதுரங்கமும், பரம பதமும்
என் பாட்டனின் பொழுது போக்கு
எண் மதிப்பும், தசம எண்களும்,
திரிகோனமிதியும், இயற்கணிதமும்
எம் தேசமிருந்தே இவ்வுலகம் கண்டது.
அத்வைதிய வேதம்தனை உலகுக்கு தந்த
விவேகானந்தன் என் தேசம்
கத்தியின்றியும் யுத்தம் செய்யும்
யுக்தி தந்த காந்தி என் தேசம்
விஞ்சானமும் மெஞ்சானமும் மெய் ஞானமும்
விதைந்து விளைந்து கிடந்ததும்
மனித நாகரிகத்தின் தாய் வீடும்
என் தேசம்
ஏனைய உலக தேசங்களே
உங்களுக்கோர் எச்சரிக்கை
நன்கு உணருங்கள்
நாங்கள் சினம் கொள்ள தேவை இல்லை
எங்கள் மூச்சு காற்று வெப்பம் போதும்
உங்களை வெந்து தணிக்க
எங்கள் கட்டை விரல்களின் சொடுக்கு போதும்
உங்கள் செவிகளை செவிடாக்க
நாங்கள் ஒன்று சேர்ந்து ஒலி எழுப்பினால்
விண்ணும் கிழிந்து விடும்!
கரம் கோர்த்து சேர்ந்து நின்றால் - எங்களுக்கு
வானும் தொடும் தூரம்!
நங்கள் எங்கள் மண்ணை
அன்னையாய் மதிப்போம்!
அதை அவமதித்தால்
அவள் தந்த உயிர்
தந்தாவது
உம்முயிர் பறிப்போம்!