அவளுக்கென்றால்

பொய்களில் புனையும் கவிதை
------அவளுக்கென்று புனைந்தால் அழகு
பொய்களில் புனையும் கவிதை
------அவளோடு நிற்கும் அந்தியின் நிலவு
பொய்யில் புனையும் கவிதை
------சாயந்திரங்களின் சத்தியங்கள்
புரிந்து புரியும் காதலென்றால்
------காதலருக்கு அதுவே வாழ்வு
புரியாத உலக மாந்தருக்கு
------அது கனவும் நிலவும் இல்லா இரவு !
~~~கல்பனா பாரதி~~~