நமீதாவா உன் மனைவி – ரீமேக் செய்யப்பட்ட பழைய கதை
நமீதாவா உன் மனைவி ?? – ரீமேக் செய்யப்பட்ட பழைய கதை
…………………………………………………………………..
ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் …!
ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ……!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்****
விறகு வெட்டி இல்லை சாமி -என்றான்
**அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்**
ஆமா சாமி ..என்றான்
கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம்
நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் …
நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம்
கூட்டிச்செல்ல மன்றாடினாள்
அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில்
காணாமல் போய்விட்டாள்…!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …!
கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
**நமிதாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …?
அவன் ஆமாசாமி என்றார்
கடவுள் திகத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …?
இல்ல சாமி நீங்கள் …..!
**முதல் நமிதாவ காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் …
அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன்
என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் ஆம் என்பேன்
நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள்
நானோ விறகு வெட்டி எப்படி சாமி…?
மூன்றுபேரையும் வைத்து வாழுறது அதுதான் சாமி நமீதாதான் என் மனைவி என்றேன் சாமி