பிரிவு
நிலவற்ற வானத்தின்
ஒளியற்ற வேதனையில்
மேகமூட்டத்தினூடே
மறைந்தந்த நட்சத்திரங்கள்
களைப்புடன் கண்ணயர்ந்து
கதிரவன் பிரிவை
கண்ணீருடன் நினை கூற,
அரவமற்ற வீதியில்
சலனமற்று அவன்
இருளில் தனி நடந்தான்;
துயரமதை தான் மறக்க
மதுவின் போதையில் திளைத்து
தள்ளாடி நடக்கும் அவன்
மேலுலக துக்கத்தின்
ஆழத்தை அர மறந்தான்;
பிரிந்து சென்ற கட்டியவளை தேடி
அவன் வீதி வலம் வரும் போது
கதிரவனே மனமுருகி
கண் சிவக்க வெளியே வந்தான்.