பிறந்தது அன்றிலிருந்து நட்பு
அழுது கொண்டு இருந்தேன் ....
அமைதியின்றி இருந்தேன் ....
யாராவது உதவுவார்களா ....?
துன்பத்தை பகிர்வார்களா ...?
ஏக்கத்தோடு இருந்தேன் ....!!!
என் தோளில் ஒரு கை ...
எப்போதுமே நான் அறியாத கை ...
சற்று திரும்பி பார்த்தேன் ....
இனம்புரியாத பிணைப்பு ...
பிறந்தது அன்றிலிருந்து நட்பு .....!!!
இப்போ என் சுமையை ...
அவனும் அவன் சுமையை ...
நானும் சுமக்கிறோம் ....
துன்பம் மட்டுமல்ல இன்பமும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை