அணுகுமுறை

நாகரீக வளர்ச்சி பற்றி அறியாத ஊர் அது.

அங்கு ஷு, காலணி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதன் இரு பணியாளர்களை சந்தை நிலவரத்தை அறிந்து வருமாறு அனுப்பியது.
முதல் பணியாளர் தனது அறிக்கையில்,

''நாம் தயாரிப்புக்கு இது சரியான தேர்வு அல்ல, இங்கு நம் நிறுவனம் வளர
வாய்ப்பேயில்லை. காரணம் இங்கிருக்கும் மக்கள் ஒருவர் கூட காலணிகளை அணிவதேயில்லை'' என்று குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பணியாளர் அனுப்பியிருந்த
அறிக்கையில்,
'' நம் தயாரிப்புக்கான சரியான களம் இதுதான். இவ்வூரில் நம் நிறுவனம் வெற்றியை காண்பது உறுதி. காரணம், இங்கிருக்கும் மக்கள் ஒருவர் கூட
காலணிகளை அணியவில்லை'''.

ஒற்றை சூழல் தான். ஒருவருக்கு தடையாக தெரிவது, மற்றொருவருக்கு வாய்ப்பாக தெரிகிறது.

சூழ்நிலைகளை புரிந்து கொள்வதும் அதை குறித்து முடிவெடுப்பதும்
உங்கள் விருப்பம். சவால்களை கண்டு சலித்துக் கொள்கிறோமா அல்லது சாமர்த்தியமாக கடக்கிறோமா என்பதை நம் அணுகுமுறைகளே தீர்மானிக்கின்றன.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (28-Jan-15, 12:38 am)
சேர்த்தது : மணிவாசன் வாசன்
பார்வை : 73

மேலே