கல்லுமிங்கு காதல்கொள்ளும்

..."" கல்லுமிங்கு காதல்கொள்ளும் ""...

மலையும் மலையும்
தம் முகம் பார்த்து
மாறோடே அணைத்து
நதியை ஆடைகளாக்கி
நாணத்தை மறைத்து
நனைந்தே இணைகிறது !!!

வெக்கமென்ன நீயென்
பக்கம் வந்தபின்னும்
அக்கமிங்கு யாருமில்லை
அவசரமும் தேவையில்லை
ஆனந்தமாய் அருகினில் வா
ஆசையாய் முத்தங்கள் தா !!!

மலையிடுக்கு இடைவெளி
மறையும்நேரம் கூடலாம்
மானிடம் மட்டுமாயென்ன
இயற்கையும் இன்பமாய்
ஓன்று கூடியே காதலிக்க
மையலின் மடியிலே !!!

காதலெனும் கவி மழையில்
மா மலையும் சிறு கடுகாம்
மாலைவேளை வந்துவிட்ட
கல்லும் காதல்கொள்ளும்
பாவம் இந்த மலைகளும்
கொஞ்(சி)சம் மகிழட்டுமே !!!

என்றும் உங்கள் அனுபுடன்,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (28-Jan-15, 2:04 pm)
பார்வை : 93

மேலே