தேடல்

எந்த உலகில் நீ இருந்தாயடா??
இன்று ,,
எந்தன் மனதில் ஏன் நுழைந்தாயடா?
உந்தன் ஒரு பார்வை அதற்கு நான் வாழ்கிறேன் !!
உந்தன் ஒரு வார்த்தை அதற்கு நான் ஏங்குகிறேன் !!
இமைகள் படபடக்க,
இதயம் துடிதுடிக்க,
மின்னலென வந்தவனே !!
ஏன்?
வானவில்லாய் மறைந்தாயடா?
என்னில் உள்ள உன்னை
எங்கெங்கோ தேடி அலைகிறேன் நானடா !!