உயிரென சொல்லுதடி

பனிப்பூக்கள் பூக்காதோ மீண்டும்
உள்ளங்கை சேராதோ நோக்கும்
கண்களென்னை தேடாதோ...
பிரிவென்னும் காட்டில்
சுடுமழை சேற்றில்
இதயமே புதைகிறதே.
மதி கழண்டு கண்மூட
ஆழ்மனத்துகள் ஒன்றிரண்டு
உன் நினைவினில் மோதுதடி
திரும்பயில் நடுவில்
உயிரென சொல்லி
உள்ளுக்குள் வெடிக்குதடி.
--கனா காண்பவன்

எழுதியவர் : (28-Jan-15, 12:20 pm)
சேர்த்தது :
Tanglish : uyirena solluthadi
பார்வை : 95

மேலே