அங்கே வருவது யார்

அங்கே..
பனிப் படலத்தின் இடையே..
நடந்து வருவது யார்..!
அவளா.. அது?
அவளேதான்..!
எப்படி நான்
இங்கிருக்கிறேன் என்பதைக்
கண்டு பிடித்தாய் ..
எனக் கேட்கிறேன்..
ஏன் அவள் பதில் சொல்லாமல்
போகிறாள்..?
ஒ..!
எங்கள் இருவரின் பெயர் பொறித்த
மரத்தின் மேலே
மறு பிறவியில்
அவள் பெயரை தினம் பாடிக் கொண்டிருக்கும்
இந்தக் குயிலின் மொழி அவளுக்கு
புரிய வாய்ப்பில்லை..!
இனி இடம் மாறுவேன்
அவள் இடத்திற்கு..
என்னைத் தேடாதீர்கள்
யாரும்..
கொஞ்ச காலத்திற்கு !