மௌனம்

மௌனம்-
தட்டிப் பார்த்தேன்;
மிகவும் திடமானது !

மௌனம்-
கண்மூடிப் பார்த்தேன்;
ரொம்பவும் இரைச்சலானது !

மௌனம்-
அண்ணாந்து பார்த்தேன்;
விஸ்வரூபமானது !

மௌனம்-
சரணடைந்து பார்த்தேன்;
என்னைப் புரிந்து கொண்டது !

எழுதியவர் : ஜி ராஜன் (30-Jan-15, 4:51 pm)
பார்வை : 93

மேலே