நான் இன்னும் பிறக்கவில்லை ----- அஹமது அலி---

எனக்கு
பெற்றோர்கள் உண்டு
எனக்கு
பிள்ளைகளும் உண்டு
ஆயினும்
நானின்னும் பிறக்கவில்லை.....
0
0
பிறவாதவனுக்குள்ளும்
பிறந்து விட்ட
ஆயிரமாயிரம் கனவுகளை
சுமக்கும் அன்னையாகவும்
நானே....
0
0
கனவுகளை
வார்க்கத் தெரிந்தேனோ
வளர்க்கத் தெரியாதோனாக.....
0
0
பிறவாமலே
ஆயிரமாண்டுகள்
வாழப் போகிறேனென்ற
நம்பிக்கை நட்சத்திரம்
எனக்குள்....
0
0
என்
பிறப்பின் திகதியை
அறிவிக்கும் அந்நாளில்...
0
0
ஆயிரமாண்டுகள்
வாழ்வேனென்ற
சான்றிதழ் தருநாளில்...
0
0
என்
பிறப்பின்
அர்த்தம் அறிந்து
வாழ்ந்த வழித் தடத்தில்
சுவடுகள் பதிக்கும் போது....
0
0
காலம் தன் பக்கங்களில்
என் பெயரை
பதிவு செய்ய முற்படும்
அன்று நான்
பிறந்திருப்பேன்..!

எழுதியவர் : அஹமது அலி (1-Feb-15, 10:43 am)
பார்வை : 155

மேலே