அகிலம் முழுதும் கலகம் - முரளி

அகிலம் முழுதும் கலகம் - அறிவாய்
இதுவே இன்றய உலகம்
காணும் காட்சிகள் பிழையே - தினம்
காண்பது எல்லாம் திரையே

நல்லன பல்கிக் கிடக்கையிலே - தினம்
அல்லன மட்டும் காட்சிகளே
உள்ளவன் வென்றனன் என்றே - தினம்
சொல்லிய சாட்சிகள் நன்றோ

ஓராயிரம் ஒன்றி இருந்தாலும் - எங்கோ
ஓரிருவர் முட்டி இருக்கையிலே
ஊதிப் புகை பெரிதாக்கியே - சிலர்
ஊரைக் கரியாய் ஆக்கிடவே

செய்திகள் ஊடகச் சூசகமும் - பொய்
நெய்திட துணியும் சாகசமும்
கொய்திட்டே கொணர் குருதியென பகை
கொழுந்திடவே காட்டும் ஆகுருதியும்

சிந்திக்கும் திறன் சீரழிக்கவே - உடன்
வந்திட்ட திங்கு வன்முறையே
முந்திக்கும் முன்நீ உணர்வாய் - உன்
சந்ததிக்கு சக்தி தான்தருவாய்

சாதி மத பேத மெல்லாம் - வேடமிடும்
சாத்தான் களி யாட்டம்
போதி மரம் தேடி யெல்லாம் -அவர்க்கு
புத்தி வரா வெறி யாட்டம்

நிகழ்கின்ற கால மதில் - தன்
நிஜம் தேடும் அயற்சியிலே
பகை மூட்டப் புகையிலே - இருண்டே
நகை மறந்த மானுடமே!

எழுதியவர் : முரளி (1-Feb-15, 10:51 am)
பார்வை : 144

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே