நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும்

நெஞ்சு பொறுக்குதில்லையே ...
ஏறுஓட்டி சோறுதின்ற கழனி -இன்று
எட்டடுக்கு மாளிகையாடா??
பாமரநிலைமாற வந்த படிப்பு -பணக்
கூறுபோட்டு போகுதாடா??
வெட்டிவெட்டி வீழ்த்தும் வீணனே- நீ, நாளை
காற்றைக்கூட காசுக்கொடுத்து வாங்குவாயடா??
உதிரத்தைப் பாலாக்கியவள் ,உன்னை ஆளாக்கியவன் -தவிக்கும் தவிப்பு
நாளை உனக்கும்தானடா??
வீறுகொண்ட நெஞ்சமதில் விடியல் காணவந்த -அரசியல்
சீறுகெட்டுப் போகுதாடா??
வெந்ததை தின்று, விதிவந்தால் சாகநினைக்கும் -உனக்கு
சாதியும்,மதமும் எதற்கடா ??
நித்திரையில் இருக்கும் மனிதா!!
இந்நிலை மாற விழித்தெழு ...
நாகரிகம் என்ற பெயரில் நாசமாகும் மனிதா!!
இதற்காகவா உன்னைப் படைத்தேன்??
உன் நிலைக்கண்டு என் நெஞ்சு பொறுக்குதில்லையே .............