முருகா முருகா முருகா
பேச்சுமரந்தேன் தமிழ் வார்த்தை மரந்தேன் ஆச்சரியத்துடன் உன்னை காணும் காட்சிதா முருகா கருணையுடன் கடைக்கண் காட்டுவாய் முருகா தரணியில் உனைப்பாடும் பாட்டுத்தா முருகா
காட்சியும் தருவாய் தீட்சண்யம் தருவாய் வேற்றுமை இனி இல்லா ஆட்சியையும் தருவாய்
தாட்சண்யம் மறந்தேன் தனியாகி நின்றேன் மோட்சமே நீயென்று வழிகாண்கின்ரென்
என் நாவிலே நடமாட நீ வருவாய் முருகா உன் அருள்ப்பாதம் நான் காண திருவருள்வாய் முருகா
கண்ணுக்குப்போட உன் வண்ணம் தா முருகா காதுக்குக் கேட்க உன் கீதம்தா முருகா
பாதுகாக்க உன் படைதனைத்தா முருகாவீடுகாக்க உன் வெற்றி வேல்தாமுருகா வேலேடுப்பேன் உன் வேதத்தில் பால்குடமேடுப்பேன் பசும் நெய் தருவேன் வெஞ்சாமரம் வீசி பஞ்சாமுருதம் தருவேன்
முந்தானைகாக்க உன் கந்தவேல் தா முடிதலைகாக்க உன்னடிதா என்மனம் காக்க உன் கந்தன்வழிதா
பழகி கொள்ள உன் அழகினைத்தா பாடிக்கொள்ள உன்பாட்டினைத்தா வீட்டிலெல்லாம் வெண்ணுவது தா
பூட்டிக் கொள்ள உன் பொன்னாரம் தா பாட்டெடுப்பேன் மயிலாட்டத்தில்
என் நாட்டமெல்லாம் கந்தகோட்டத்தில் வீட்டிலேந்தன் உன் கூட்டுத்தான்
தோழா குழைவான சோற்றிலே அமிழ்தான தமிழ் பிசைந்து திருமுருகாற்ருப் படைதனிலே உருவாகிவா திருப்புகழ் இசை இசைந்து கடும் நடையாய் வருமக்கள் காவடிகள் தொள்சுமந்து பால்குடமாம்
பன்நீர்க்குடமாம் பழனிமலை படிகளிலே சேடியரின் ஊர்வலமாம் தமிழ் பாட்டு ரென்றால் தலையாட்டங்கள் ஓடிவாமுருகா ஓடிவாமுருகா விரைந்தோடிவாமுருகா