நெஞ்சு பொறுக்குதில்லையே
இயை இனமது இதழ் இரசிப்பது
எது எது என்றோசை எகிறுது
இண்டை இதமிடும் இதிகாசம் இயற்றிடும்
தமிழ்லொன்றெ அது நீ உணர்வாக இரு
புடவியானது புலமையானது புலன்களில் புரைவது
இன்று இடறிப்போனது இடிந்துப் போனது
என்-அகரத்தின் அடையாளம் அழிக்கப்பட்டது ஆழ்த்தப்பட்டது
உணர்வானது உருக்கப்பட்டது உருகிப்போனது உடமைகள் உருவப்பட்டது உதறிவிட்டது
காவனொன்று நம்மின கில்லமதில் கூடுகட்டி காளகூட
கூட்டுக்கட்டி கலைக்கிறது கருவறுக்கிறது களங்கப்படுத்துகிறது
கண்கள் கருமை காணவில்லையா?? நரம்பினுள் உணர்வுகள் உணர்த்தவில்லையா ??
அல்ல இது ஆட்டிப்படைக்கும் மேற்கத்திய போதையா ??
தண்டமிழ் தடுமாறிப்போன-ததை தாங்கி நிமிர்த்த
தாய்த்தந்தையில்லை தத்தளிப்பு தங்கியதே தமிழா
தலைமையானது தகவு தெறித்தது நம்மினமடா தணியவிட்டாய் தனியாய் விட்டாய் உன்னுணர்வை காற்றில் விட்டாயோ- கதற விட்டாயோ ??
தண்ணியகுலம் வேண்டாம் உயரியகுலம் வேண்டாம்
தோப்பாகும் திராவிடம் வேண்டாம்- நமக்கு
தாய்த்தமிழ் உணர்வு போதும் தமிழனென்ற உணர்வு போதும்
அதுவே வீரம் நம் நெஞ்சினிலே ஈரம் வேறென்ன வேண்டும்
இதுவே போதும் இது மட்டும் போதும்
செம்புனல் செத்தாலும் செம்மையானது என் இனமடா!!
செம்மொழி ஒன்று செம்மினம் ஒன்று
தமிழா நீ அணைக்கட்டு தமிழர்களை வைத்து ஒன்றுக(த்து)ட்டு
உரக்க உரக்க உரைத்திடு நீ தமிழினம் என்று
வன்முறையானது காந்த தேய்பிறைப் போன்றது
இறுதியில் ஈன்றேடுப்பது குருதிவெள்ள தேகம்
கருமை நிற மேகம் மனதிலே குற்றமென்ற பாரம்
புத்திக்கு எட்டுதா மடையா ?? செத்துவிட்டாய் நீ
எம் தமிழையும் சாவடிதாய் சாட்டையிலடித்தாய் சாய்த்தாய் சரித்தாய்
அறிவுகெட்ட நாய் உனக்கு ஏனிந்த வம்பிழுக்கும் வாய் ??
வேணாமே நீ இந்த பேய்க்கு சேய்யானபின்பு- ஏனெனில் உன் தாய் துந்தத்தில் அடித்தாய் இறுதியில் தாய்ப்பாலை தந்தியடித்து விட்டாய்
சூத்திரரானோம் வடமொழி சுலாவு சுண்டியத்தில்
சுதாகரிக்கும் முன்னே நடத்தைக்கெட்டவளானாள் நம் அன்னை
வேற்றுமொழி செய்த சதி பாதிப்பு என்பது தமிழன் விதி
நால்வருக்கு மனைவியாக்கியது ஐயரின் மந்திரம்
மந்திரமா அல்ல சுரதமங்கை ஈன்றெடுத்த ஈனப்பிறவியின் தந்திரமா ??
கரிய கரி அப்பிவிட்டாய் தமிழா கரத்தினில் கறம் கொண்டாய்
கறைக்கொண்டாய் களவுக்கொண்டதால் மானமிழந்தாய்
மாற்றம் கொண்டு வாரும் நீர் விழித்தெழு தமிழினமே