என் அம்மா
தாய்மையின் ஒவ்வொரு
தருணத்திலும் உன்னையே
நினைத்து நினைத்து தவிக்கிறது மனம்,
என் அம்மா.....
என் பிள்ளை என்னை முட்டும்போதும்
என் பிள்ளையை என்னில் உணரும்போதும்
ஒவ்வொரு நொடியிலும்
உனர்கிறேன் என் பிறப்பை...
தவறவிட்ட உன்னை நினைத்து ,
என் தாய்மையின் ஒவ்வொரு நொடியும்,
நீயற்ற ஒவ்வொரு கனமும்
தனிமையில் தவித்து துடிக்கிறேன்...
உன் கையால் சமைத்ததை சாப்பிட,
உன் மடியில் தலை சாய்த்திட
உன் அணைப்பில் கண் உறங்க
என் மனம் ஏங்கி தவிக்கிறது...
பாவியாகிவிட்டேன், அம்மா அதனாலேயே,
பாவி எனக்கு கிட்டமால் போய்விட்டது,
உன் மடி இப்பொழுது,கண்ணீரில் தவிக்கிறேன்,
ஒவ்வொரு இரவின் தனிமையில் உன்னை நினைத்து என் அம்மா..
மறக்காமல் இன்றும் நினைவில் சுமக்கும்,
உன் கடைசி அணைப்பும்,என் மீதான
உன் இறுதி பார்வையும்,
உன் கையால் உண்ட கடைசி சோறும்,
மீண்டும் எனக்கு கிடைக்காதா அம்மா...
ஆசைப்பட்டதொல்லாம் கிடைக்கும் என் தாய்மையில்
நான் வேண்டுவது எனக்கு கிடைக்காதா
உன் தாய்மடி அம்மா..