பழகு

கேள்வி கேட்க பழகு !
பிறரிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக
உன்னிடமே உன்னைப்பற்றி நீ
கேள்வி கேட்க பழகு !

பின் தொடர பழகு !
யாதும் பிறர் தொடர அதை நீ
தொற்றிக்கொண்டு போகாமல் பகுத்தாய்ந்து
பின் தொடர பழகு !

நீ செயல்படப் பழகு !
சொல்லிக்கொண்டு இருப்போர் யாவரும்
நின் செயல்பாடு பற்றியே சொல்லிக்கொண்டிருக்க
நீ செயல்படப் பழகு !

எழுதியவர் : செந்தில் குமார் ஜெ (3-Feb-15, 12:44 pm)
Tanglish : pazhaku
பார்வை : 70

மேலே