புத்தகச் சந்தையில்

"விலையில்லை"
தலைப்பில்லை
புத்தகச் சந்தையில்?!....

ஏதேட்சையாய்
திருப்பிய பக்கத்தின்
ஒரு வரிக் குறிப்பு
மறந்து தொலைத்த
பெரும் பொறுப்பொன்றை
ஞாபகப்படுத்தலாம்?!.....

சிறுகதை
அட்டைப் படங்கள்
உற்றார் உறவினர்களை
அடையாளம் காட்டலாம்?!......

கவிஞர்கள் வியாபாரிகளாய்?!.....
வியாபாரிகள் கவிஞர்களாய்?!.....

பக்கங்களின் விலை
வாங்க முடியாத தூரத்தில்?!.....

புதுமை பழமையாயும்?!....
பழமை புதுமையாயும்?!...
காட்சிதரலாம்!!.....

வாஸ்து சாஸ்திரப் படி
புத்தகங்களுக்கு
ராசியான இடம்?!....

பெண்கள் கூட்டம்
அலை மோதுகிறது
சமையல் குறிப்பின் விலை மாறுகிறது?!.....

வாசகன் என்ற உரிமையில்
கன்னிப் புத்தகங்களை
கை தொட்டுப் பார்க்கலாம்?!.....

தேடலின் கலைப்பில்
வாசகனின் கண்கள்
"தேநீர்இடைவேளை"யை
எதிர் பார்க்கலாம்?!......

எழுதியவர் : வைகை அழகரசு (3-Feb-15, 2:51 pm)
பார்வை : 82

மேலே