கருவிலும் தெருவிலும்
ஆ) நெஞ்சு பொறுக்குதில்லையே
..."" கருவிலும் !!! தெருவிலும் ??? ""...
அழுகாமல் உன்னை
கருவில் சுமந்தவள்
அழுக்கை குடித்தே
தாகம் தனிக்கிறாள் !!!
குருதியை சிந்திடும்
அழுகைதான் வருகிறது
அறிவிழந்த மைந்தனை
எண்ணியே ஆண்டவனே !!!
அறிவியல் நித்தமுமாய்
அழகாய் வளர்ந்துவர
அன்பினம் உள்ளங்களோ
ஆழமாய் அழித்துவர !!!
மனிதம் இறந்துவிட்ட
ஆடம்பர வாழ்கையின்
மோகமா அடித்து விரட்ட
அன்னைமீதே கோபமா !!!
வாழைக்கு கீழ்க்கன்று
வையகத்தில் உள்ளதடா
விதைத்தது நிச்சயமாய்
ஒருநாள் அறுவடையாகும் !!!
சுழலுகின்ற பூமியிலே
சுழற்ச்சியே வாழ்வுமுறை
சுமந்தவள் பெருமையது
அப்போதுனக்கு புரிந்திடும் !!!
கருவில் சுமந்தவளை
தெருவிலே விட்டுவிட்டு
விறைப்பாக நடந்திடும்
மண்ணின் மைந்தருக்கும் !!!
விசாரணையிலா மரணதண்டனை
உடனுக்குடன் நிறைவேற்றும்
புத்தம் புதியதொரு சட்டமிங்கு
தாமதமிலா விரைந்து வரவேண்டும் !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.