நெஞ்சு பொறுக்குதில்லையே - மண் பயனுற வேண்டும் கவிதைப் போட்டி

விளை நிலங்களின் வீழ்ச்சியில்
விலை நிலங்களின் ஆட்சிகள்
பணத்தின் பிடியில் பாரத தேசம்
ஊழல்வாதிகளின் புழுகு மூட்டைகள்
ஆட்சி செய்பவனுக்கு சாதக சட்டங்கள்
பெண் குழந்தைகள் மேல் பாலியல் பலாத்காரங்கள்
மதத்தின் பெயரில் சுதந்திர இந்தியா
பட்டம் பெற்றும் வேலையில்லா திண்டாட்டங்கள்
கடவுளின் பெயரில் காமக் களியாட்டங்கள்
கூத்தாடிகளின் பின்னே உருப்படாத கூட்டங்கள்
ஒருவேளை உணவிற்காய் உயிர் மாய்க்கும் ஏழைகள்
திறமை இருந்தும் முயற்சி செய்யா முட்டாள்கள்
வேடிக்கை பார்க்கும் வெட்கங்கெட்ட ஜென்மங்கள்
மதுவிற்காக மானத்தை கூட்டிக்கொடுக்கும் மடையர்கள்

இத்தனை அவலங்களை கண்டும்
காணாமல் நிற்கும் கல்லான தெய்வங்கள்...
நெஞ்சு பொறுக்குதில்லையே
இனி ஒரு சுதந்திரம் வேண்டி
தனியே போராட
நெஞ்சில் தீரமில்லையே...
----------------------------------------------------------------------------------------------------------
இது என்னுடைய படைப்பு என உறுதி அளிக்கிறேன்...
பெயர்: தவம் (வடிவேலன்)
வயது: 30
முகவரி: 2, பாப்பம்மாள் காலனி, அரியமங்கலம், திருச்சி-620010. தமிழ்நாடு
அலைபேசி: +919787737577.

தற்போதைய முகவரி: ஜுபைல், சவுதி அரேபியா.
அலைபேசி: +966590297907.

எழுதியவர் : தவம் (4-Feb-15, 1:19 pm)
பார்வை : 257

மேலே