நான்
மண்ணில்வந்த நான் யார் சொத்து மலைமகள் பார்வதி மடிமுத்து
தணலில் பிறந்த நான் யார் உயிர்ப்பு தலைமாலை அணிந்தவள் கனல் சிவப்பு
பனியில் உதிர்ந்த நான் யார் வடிப்பு கங்கை என் தாய் துளி பிறப்பு
ஒளியில் பிரிந்த நான் யார் வரிப்பு உதிக்கும் சூரியன் மகள் மினுக்கு
மதியில் மிளிர்ந்த நான் யார் மதிப்பு மொழியில் சிறந்த தமிழ்துடிப்பு
மலர்ந்திடும் பூ மகள் யார் கலப்பு மாமலர் தாமரை தேன் இனிப்பு
புலமையில் புகுந்த நான் யார் புதுமை புரட்சிக்கவி பாரதி வரிமுடிப்பு