கடவுளைத் தேடி…
மரணத்தின் விளிம்பில்
நண்பனே நீ
ஆக்சிஜன் குழாய்களோடு
போராடிக்கொண்டிருக்கையில்
”எங்களின் கைகளில் எதுவுமில்லை”
என்று
மருத்துவர்
கைகழுவி விட்டுப்போயும்....
உன்
இமைகளின் அசைவிற்காக
இமைக்காமல்
நாங்கள்
காத்திருக்கையில்...
உன்
மூச்சுக்காற்றிற்காக
நம்பிக்கையோடு
எங்களின்
மூச்சினை
விட்டுக்கொண்டிருக்கையில்..
காற்றில்
பற்றுதலுக்காய்
அலைபாய்கிற
மல்லிகையின்
தேடலாய்..
ஏதோ ஒன்றை
தேடுகிறோமே....
என்ன அது....??
வந்து போன
வரன்களெல்லாம்
பிடிக்காததற்கான
காரணங்களையே
பட்டியலிட்டுப்
அனுப்ப....
இனி
வரப்போகும்
ராஜகுமாரனாவது
”பிடித்திருக்கிறது”
என்று
உயிர்கொத்திச்
செல்வானா
என
எதிர்பார்த்திருக்கையில்
தலைகோதிவிட்டு
போகும்
தாயின் நேசம்..
இன்னுமொரு
சுயம்வரத்திற்கும்
என்னை
தயார் செய்யும்.....
இந்த
நம்பிக்கைக்கு
என்னதான் பெயர்...??