புன்னகை
காற்று மோதிய பின்
சருகுகளாய்
இலைகள் ..
காற்றும் இடம் மாற
வெற்றிக்குப் பின் ..
தோல்விதான்..
இரண்டுக்குமே..!
..
புதிய மோதல்கள்..
பழைய கதை..
தொடர்கிறது ..
என்றென்றும்..
எங்கெங்கும்..
எல்லாவற்றிலும்..
முடிவின்றி..
இயற்கையின் முகத்தில்..
வெற்றியின் புன்னகை !