நெஞ்சு பொறுக்குதில்லையே ஏன் நாட்டின் துயரம்

நெஞ்சு பொறுக்குதில்லையே

இந்திய நாடு நம் நாடு, இந்தியன் என்பது என்பேரு, இந்தியன் என்று மார்தட்டும் வேளையில்,

காந்தி மகான், பாரதி வாழ்ந்த நாட்டில்
குழந்தைகளையும் ஆச்சமின்றி சூறையாடும் காமுகர்களை பார்க்கையில்,
லஞ்சப்போர்வையில் நாட்டை சூறையாடி பெருத்துகிடப்பவர்களை பார்க்கையில்,
விவசாயமேனும் நம் குலபெருமையை அடுக்குமாடி கட்டிடம் கட்டி மடிவதை பார்க்கையில்,
விலைபொருலெல்லாம் விண்ணைத்தொட்டு உயர்ந்துகொண்டேயிருப்பதை பார்க்கையில்,
நாளைய தலைவர்களாம் இன்றைய பிஞ்சுகள் பசியில் வாடுவதை பார்க்கையில்,
ருசிக்கு எங்கும் நம்மில் பசிக்கு மடியும் மக்களை பார்க்கையில்,
நூரில் ஒரு பங்கு பெறாத அண்டைனாடெல்லம் மிரட்டுவதை பார்க்கையில்
இவையனைத்தையும் பார்த்து பாராததுபோல் என் வாழ்வு, என் குடும்பம், என் சுற்றம் என்று வாழும் என்னை கண்ணாடி பிம்பத்தில் பார்க்கையில்,

நம் இந்திய நாட்டை பார்க்கையில்...

அய்யகோ பொறுக்கவில்லையே என் நெஞ்சு பொறுக்கவில்லையே..



###################################
பின்குறிப்பு:
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும், திருத்திக்கொள்ள அனுமதிதர வேண்டுகிறேன்.

எழுதியவர் : நான் வாளுப்பையனுக்குள் ம (6-Feb-15, 3:22 pm)
பார்வை : 335

மேலே