தென்றல்

நிழலும் தீண்டா தேகத்தை

நின் ஸ்பரிசத்தால் தீண்டும்

தென்றலே!
நீயில்லாது ஒரு உலகமில்லை

நீயில்லாது ஒரு உயிருமில்லை !

ஜனனத்திற்கு ஜன்னல் கதவாய் நிற்கும்

நின் ஜனனம் எங்கிருந்தோ?

முடிவில்லா உன் தொடக்கத்தை


தேடி தென்றலாய் ..............!

எழுதியவர் : மது (6-Feb-15, 4:28 pm)
பார்வை : 183

மேலே