மகா கவி

மகா கவி...!

என்னில் -
உறக்கத்தின் பொழுதும்
உள்ளங்கை ரேகையாய்
ஊர்ந்து கொண்டிருத்த
உயிரின் உணவே...!

என்னுள் -
விதை உறக்கம் கலைத்து
விளைச்சலை விளைவித்த
விஞ்ஞான நிலமே....!

எனது -
கவிதை வேள்வியில்
மருக்கொழுந்து ஆகுதியான
மொழியின் மூலமே...!

தமிழின் நாதமே...!

பாரத தீயாய் -
பார் அதிர ...பாடி வென்று...
நின்ற நின் பா...
ரதியெனவே ...
தோன்றுவதால் - நீ
பாரதியோ...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (6-Feb-15, 7:56 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
Tanglish : maga kavi
பார்வை : 84

மேலே