ஆதலினால் காதல் செய்வீர்மண் பயனுற வேண்டும்கவிதை போட்டி

அன்பின் அச்சிலே அரும்பிய காதல்
அமில வீச்சிலே அழிந்து போகுமோ?
தகுதிகள் கடந்து ததும்பிய காதல்
தடைகள் கண்டதும் தற்கொலை செய்யுமோ?

கடற்கரை மணலில் ஓடி பார்க்கிறேன்
கடவுளின் காலடி தேடி சோர்கிறேன்
காதல் இங்கு களவு போனதோ?
காற்றே இன்றி உயிர்கள் வாழுதோ?

காதலர்களே ஒரு வேண்டுகோள்
காதலுக்கு சிலை செய்தால்
கண்ணிய சிற்பி ஆகுங்கள்...
காத்திருப்பின் கணங்களில்
கற்பனை வீணை தீட்டுங்கள்-அதில்
காதல் கவிதை மீட்டுங்கள்

உலகம் சுழழும் வரை
காதல் வாழும்
"ஆதலால் காதல் செய்வீர்"
வரம்புகள் மீறினால்
உலகம் உங்களை சூழும்
"காதலை காதலாய் செய்வீர்"...

எழுதியவர் : வீ. சீதளாதேவி (6-Feb-15, 9:59 pm)
பார்வை : 117

மேலே