பிறந்தநாள் வாழ்த்து

கவிதைகள் பல
தவழும் பெண்ணழகே
காவியங்கள் சில
திரழும் பொன்னழகே

ஆயிரம் அகழாய்வு
நடக்கிறது என்னுள்
உனக்காக வாழ்த்து மடல்
எழுத முயற்சிகையில்

எழுதுகோல் முனை பதித்து
காகித காயங்கள் எல்லாம்
கவிதையாய் மாற்றம் பெருகிறது

என் இதயத்தில் கிடத்தப்பட்ட
உன் நினைவுகளெல்லாம்
வார்த்தைகளாய் பெயர்கப்படுகிறது

விழி மூடிப் பார்
காதோரம் கவிதை தூவுகிறேன்
கசிந்துருகும் உயிரோடு
சிதைகிறேன் நான்
உன் பிரிவில்..
காலம் வரும் காத்திரு
நிச்சயம் கரம் பற்றுவேன்

காற்றோடு கலந்துவிட்டேன்
நீ என்னை நுகர்ந்தாயா?
நிலவோடு நிழலாகிவிட்டேன்
நீ என்னை உணர்ந்தாயா?

என்னுயிரில் கலந்த
என்னுள் ஒரு பாதியே
தேனில் ஊறிய கனியே
காதல் ஊற்றிய கவியே

வழியோடு நீ சுமந்த
கனவுகளெல்லாம்
நினைவாகட்டும்
நீ தொட்ட இடமெல்லாம்
பூக்கள் மலரட்டும்
நீ எடுத்த முயற்சி எல்லாம்
வெற்றி நிலைக்கட்டும்
அன்பு பெருகட்டும்
துன்பம் நீங்கட்டும்
இன்பம் நிறையட்டும்
காதல் வளரட்டும்

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
வாழ்க!!
நீடுழி வாழ்க!!

எழுதியவர் : கோபி (8-Feb-15, 11:07 pm)
பார்வை : 12309

மேலே