உன் உள்ளங்கை கைக்குட்டை

ஒரு
குழந்தைக்கு
நீ கொடுத்த
பறக்கும் முத்தத்தை
வழிப்பறி செய்தது
காற்று !

=======================

தெரியாமல்
என் மீது
மோதிவிட்டு
ஸாரி கேட்டாய் !
நான்
ஸாரியிடம்
ஸாரி கேட்டேன் !

=======================

நீதானே
சோம்பல் முறிக்கிறாய் !
நான் ஏன்
சுறுசுறுப்பாகிறேன் ?

=======================

கலைந்து
கிடப்பதையும்
ஒப்பனையாக
மாற்றிவிடுகிறது
உனதழகு !

=======================

தூசி தட்டி
சாவி போட்டு
ஸ்டாண்ட் எடுத்து
வலிக்காமல்
அமர்ந்து
நீ
முறுக்கியதில்
உன்னை
ஓட்டிக்கொண்டு போனது
அந்த ஸ்கூட்டி !

=======================

நீ
கைதட்டினாய் !
பாராட்டுக்களின்
உலகத்தில்
கைதட்டல்,
கைதட்டல்
வாங்கியது !

=======================

முட்டையை
அடைகாக்கும்
கோழி
குஞ்சு பொரிப்பது போல
கைக்குட்டையை
அடைக்காக்கும்
உன்
உள்ளங்கை
பட்டாம்பூச்சி
பொரிக்குமா ?

எழுதியவர் : கிருஷ்ண தேவன் (10-Feb-15, 8:18 am)
பார்வை : 506

மேலே