பாராயோ
உன் பார்வைக்கு
நான் தெரியாமல் போன
ஒரு நொடி பொழுதில்
எனை சுற்றி ஆயிரம்
ஆயிரம் உறவுகள் இருந்தும்
பஞ்சத்தில் அனாதையானது போன்று..
என் பிறப்பின் முகவரியையே
தொலைத்தவனாய் மூச்சடைத்து நின்றேன்..
சுவாசமும் எனக்கு இரவல் தான் என்று..!!
..கவிபாரதி..