காதல் மொழி
விரல் பிடித்து விழி மறித்து உன் மொழி கொடுத்தாய் என் முன்னே,
விழி விழித்து மொழி மறந்து உன் வழி சாய்கிறேன் என் பெண்ணே,
உன் செவி மடித்து மனம் உருகி உன்னுள் தோன்றுகிறது சிறு நாணம்,
அதை அறிந்து உன் மனம் முறைந்து அன்பால் அரவணைப்பேன் தினம் நானும்