கைம்மாறு

அம்மா !
வாடி நின்றேன் ,வாரி அணைத்தாய்!
தேம்பி வந்தேன்
தேறுதல் சொன்னாய்!
பசியோடிருந்தேன்
பதறி பால் சோறு தந்தாய்!
அடிபட்டு நின்றேன்-எனக்காய்
அழுது நின்றாய்!
நோய் என்று வந்தேன்
நோகாமல் பணிவிடை செய்தாய்!
இன்று
பார்க்கணும் போல் இருக்கு வா, என்றாய்
விமான பயணச் சீட்டிற்கே லாட்சம் வருது
பார்க்கலாம் என்றேன்!

எழுதியவர் : இனியா பிரேம் (13-Feb-15, 1:03 am)
Tanglish : kaimaaru
பார்வை : 105

மேலே