பூங்காற்று
வினா கேட்கும் பூங்காற்று
விடை தேடி ஓடுகிறது
செவியோடு பேசினாலும் சுவாசமாக கலந்தோடினாலும்
வார்த்தை மட்டும் வெளிபடுவதே இல்லை.
மௌனமாய் கீதத்தை இசைக்கிறான்
சங்கீதத்தை உருவமாக்கி உயிர்களுக்கு உணர்வை ஊட்டுகிறான்.
அண்டமும் அவனாய் இருப்பதாலே அசைவுகளின் நாடியாய் துடிக்கிறான்
ஒரு நொடி அவனின்றி யாருமில்லை
அவனறிந்து கெடுதல் செய்ததில்லை
விழும் துளியில் வாழும் அவன் நிலம் சேரும் மனிிதனிடத்தில் நீங்குகிறான்
விடை தேடி அலைந்த மனிதனும் வினாவாகி போகிறான் வெறும் கூடாய்....்்