காதல் விளையாட்டு

காதல் விளையாட்டு

காதலிக்க மறுத்த
கல்லூரி மாணவிக்கு
பீர்பாட்டில் குத்து

காதல் சொன்னவன்
ஊர்சுற்றும் காலி


மறுக்கபட்டவன் வெட்கப்பட்டு
ஒதுங்கியிருந்தால் உத்தமன்

அவளும் அவன்பழக இடங்கொடுத்து
பெற்றோர்க்குத் தெரிந்தவுடன் ஒதுக்கியதால்
காலிப்பையனின் பீர்பாட்டில் குத்தால்
படுகாயம் அடைந்து மருத்துவமனையில்

படிக்கும் வயதில் அவளுக்குக் காதல்
உடன்பட்டுப் பழகியவன் ஊர்சுற்றும் பொறுக்கி
ஊடகக்காதலைச் சுவைக்கும் போதுதான்
நடைமுறை வாழ்க்கை நம்கண்ணில் தெரியும்

அதைப் புரியும் மனமின்றி
நாடகமாய்க் காதலை அரங்கேற்றி
வமபை வரவழைத்து அழிவினைத் தேடுவதை
யார் தடுத்துக் காத்திடும் திறன்கொண்டு திரிவார்?

எழுதியவர் : மலர் (13-Feb-15, 10:28 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : kaadhal vilaiyaattu
பார்வை : 149

மேலே