காதலி-யி-ன் மரணம்

-- -- நம் மணநாள் குறித்து
நான்கு நாட்களே ஆனநிலையில்
-- -- உன் மரணநாள் குறித்து
உண்மை அறியாமல் போனதன்
-- -- மாயையை அறியேன் நான்

-- -- கொடிய நோயுடன் உன்னை
கொண்டு செல்வேன் என்று
-- -- காலன் ஒருமுறை - என்
காதினில் சொல்லிச் சென்றிருந்தால்
-- -- வந்திருப்பேன் நானும் உன்னுடன்


-- -- உன்னுடன் கரம் பிடித்து
ஊலா வந்த வீதிகளில்
-- -- வெறுமை மட்டும் துணையாக
தனியே நடந்து கொண்டிருக்கிறேன்
-- -- உயிர் உன்னைவிட்டு பிணமாக

-- -- மலரைப் பறிக்கக்கூட மனமில்லாமல்
செடியில் வைத்துப் பார்த்தே
-- -- அழகை ரசிக்கும் மென்மையானவள்
நெருப்பு உன்னைச் சூழ்ந்த
-- -- சோகத்தினை யாரிடம் முறையிடுவேன்

-- -- செவிக்கு எட்ட மறக்கும்
உன் செல்லச் சிரிப்புகள்
-- -- நினைவில் மட்டுமே நின்றுபோன
உன் கொலுசின் ஓசைகள்
-- -- ஓயாது கொல்லுதடி மனதினை

-- -- நாம் சென்ற இடமெல்லாம்
செல்லத் தோணுதடி எனக்கு
-- -- சென்ற இடத்தில எல்லாம்
உன்னையே தேடுதடி மனது
-- -- வந்துவிடு மீண்டும் உயிர்த்தெழுந்து

-- -- உன் புகைப்படம் மட்டுமே
துனையகுமோ இதயதிற்கு - இல்லை
-- -- உனக்கே தெரியாமல் திருடிய
உன் கைக்குட்டை துடைக்குமோ
-- -- விழியில் வழியும் கண்ணீரை

-- -- உன்னை அழைத்துச் சென்ற
மரண வீதியின் நடுவே
-- -- உன் வழிதேடி வருகிறேன்
உன்னோடு அழைத்துச் சென்றுவிடு
-- -- மரணம் எனக்கும் நிகழட்டும்

-- கற்குவேல் .பா

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (13-Feb-15, 9:59 pm)
Tanglish : kaathaliyin maranam
பார்வை : 660

மேலே