வண்ணம் வானில் விரிந்திடும் நீலம்

கன்னம் தாய்தந்த முத்தப் பேழையாம்
அன்னம் நீந்திடும் வண்ணப் பறவையாம்
வண்ணம் வானில் விரிந்த நீலமாம்
எண்ணம் உன்தமிழாம் வெண்பா !

-----இப்பா வெண்பாவின் தன்மைகள் பெற்று இருப்பினும் அசைபிரித்துப்
பார்க்கும்போது அடிகளில் தளை தட்டுகிறது
மா முன் நிரை விளம் முன் நேர் வரும் இயற்சீர் வெண்டளை
காய் முன் நேர் வரும் வெண்சீர் வெண்டளை வெண்பாவிற்குரிய தளைகள்

தகுந்த சொற்களால் மாற்றியபின் தூய வடிவம் பெற்ற இன்னிசை வெண்பா .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கன்னமோ தாய்தந்த நல்முத்தப் பேழையாம்
அன்னமோ நீந்திடும் வண்ணப் பறவையாம்
வண்ணமோ வானில் விரிந்திடும் நீலமாம்
எண்ணமோவுன் செந்தமிழ்வெண் பா !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Feb-15, 5:08 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 114

மேலே