பேறுகாலம்
பிரசவத்தில் தான்
பிறக்கின்றன
கவிதைகள் .
கவிதைக்கும்
"கரு"இருப்பது
இந்த
காரணத்தால் தான் .
எழுதுகோல் வழி
சிந்தனை வெளிப்படுத்த
வெள்ளைத் தாளில்
வீரிய வித்துக்கள்
சூல்கொண்டச் சிந்தனை
"உண்டாகி"விட்டா ல்
கத்தக் கத்த
கவிதை வரும் .
"முழுகாமல்"நனைய வைக்கும்
முத்த(ம்)தமிழ்
கவிதை .
தமிழின்
தொப்புள் கொடியில்
ரத்தத்தால் பூத்ததை
கண்ணீரால் கழுவி
கைகளில் தந்தேன் .
கொஞ்சிவிட்டு
கொடுங்கள் .
கடைசியாக
சுகமாக இருப்பதில்லை
பிரசவங்கள்
பிரசுரங்கள் .