காக்கைச் சிறகினிலேஇன்னும் சற்று நொடிகளில் - போட்டிக்கவிதை
காக்கைச் சிறகினிலே..
கடுகாக நான்மாறி அமர்ந்து..
ஒருநாள் வாழ்ந்து வந்தேன்..
எனக்குள் எழுந்தது ஒருகேள்வி..
அதைஉங்களுடன் பகிறத் தந்தேன்..
பறக்கின்ற பறவை யெல்லாம்..
நடப்பதை இழிவாய் நினைப்பதில்லை..
இதுவே மனிதரா யிருந்திருந்தால்..
நடப்போர் சங்கம் உண்டாக்கி..
தாழ்த்தப் பட்டவர் என்றாக்கி..
சமத்துவம் தேடும் சாமானியராயத்..
தன்தூக்கம் தொலைத்தி ருப்பான்தானே?