கல்லூரி காலம் பொற்காலம்

வசந்த கால எண்ணங்கள் --- இங்கே
வைகறை மேகம் தான் எங்கள் நட்பு !

அன்போடு எங்கள் கனவுகளும் ---- இங்கே
அசைக்க முடியாத நல்ல உறவுகள் !

இந்த சந்தோஷ காலத்தில் கற்பனையில்
மிதந்தோம் ! காவியங்கள் படைத்தோம் !

என்னிள்ளடங்காத நண்பர்கள்
எழுச்சி உடைய நல்ல சிந்தனைகள்
தெளிவான நல்ல முடிவுகள் !

நல்ல கல்வி கற்றோம் --- முடிவில்
பறந்து சென்றோம் பட்டம் பெற்று .........

இனி வருமா இந்த கல்லூரி காலம் !
நல்ல கனவு களுடன் பொற்காலம் !!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் . (23-Apr-11, 1:55 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 547

மேலே