வந்தாள் மகா லட்சுமி

மணக் கோலத்தில் அழைத்து
வரப்பட்ட என் பைங் கிளியே
மகிழ்ச்சியின் ஆரம்பத்திற்கு
வித்திட வந்த என் தேவதையே
நான்கு திசைகளும் மங்கள
வாத்தியம் முழங்கிட புதிய
உறவிற்காக பூத்த பூமகளே
வருக வருக வருக
உந்தன் பிறந்த வீட்டை விட்டு
புகுந்த வீட்டிற்குள் அடி
எடுத்து வைத்தாய்
விளக்கு ஏற்ற வந்த மகாலட்சுமியே