வாழ வேண்டும் மனிதனாக

பாட்டாளி வர்க்கத்தின் பசிதீர வேண்டும்....
முதலாளி வர்க்கத்தின் மனம்மாற வேண்டும்....
ஏமாளி வர்க்கத்தின் ஏழ்மைநீங்க வேண்டும்....
சோம்பேறி வர்க்கத்தின் குணம்மாற வேண்டும்....
விவசாய வர்க்கத்தின் விதிமாற வேண்டும்...
படிப்பாளி வர்க்கத்தின் நிலைமாற வேண்டும்.....
குழந்தைகளில்லா குப்பைத்தொட்டி அதுகாண வேண்டும்...
போர்கள்இல்லா எல்லை தினம்காண வேண்டும்...
பெற்றோர்கள் பெரியோர்கள் மதிக்கப்பட வேண்டும்....
குற்றங்கள் செய்வோர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.....
சட்டங்கள் யாவும் விழித்தெழ வேண்டும்....
பசியில்லா உயிர்கள் உலகில்காண வேண்டும்,...
ஈடுஇணையில்லா இயற்கையதைப் பாதுகாக்க வேண்டும்...
இத்துணையும் மாற,,,
வஞ்சமில்லா நெஞ்சம் அதுநம்மில் வேண்டும்....
ஒற்றுமையான சமுதாயம் நாம்படைக்க வேண்டும்...
சாதி ,மதம், இனம், மொழி, நாடு கடந்து நாம் வாழ வேண்டும் மனிதனாக ......