அவலங்கலோர் அலசல்

அவலங்கலோர் அலசல்....

பால்குடி மறவா
பிஞ்சுகளுக்கோ
பாலியல் தொல்லை ....

ஏர்க்குடியில்
பிறந்தவனுக்கோ
ஏனோ இன்னும் ஏழ்மை ...

நிராகரிக்கப்பட்டால்
நடக்குது
அமிலமழை திருமுழுக்கு ...

நித்தம் நித்தம்
நிருப்பிக்க துடிக்குது
இளைஞர்களின் நெஞ்சங்கள்...

வாட்டி வதைக்குது
பஞ்சமும் பட்டினியும்
மேலும்
போட்டி போடுது
இயற்கையும் செயற்கையும் .........

இன்று , இணைந்த கரங்கள்
இருதிங்கள் மட்டுமே ,
இடையில் வந்ததோ
திக்கற்று நிக்குது...

கோடியில் புரளுது
ஒரு கூட்டம்,
பசியில் வாடிமடியுது
மறு கூட்டம்....

காக்கத்துடிக்குது
ஓர் இனம் ,
தன் கடமையை மறக்குது
மறு இனம் ........

புத்திப் பேதலித்து
திரியுது ஒருபக்கம்
மனநிம்மதி தேடுது
மறுபக்கம் ......

குற்றச்சொல்லித்
திரியுது ஒருகூட்டம்
தினம் சட்டங்களில்
ஏறுது விலையேற்றம் ......

எழுதியவர் : சுடர்விழி.இரா (18-Feb-15, 5:51 pm)
பார்வை : 105

மேலே