குருட்டுக் கவிதை

ஔவைக்கு கனி
கொடுத்திருந்த முருகன்
பாவம்.. பசித்திருந்த
குப்பம்மாள்களைத்தான்
கண்டு கொள்ளவே இல்லை....

நந்தனுக்கு விலகி
வழிவிட்டிருந்ததாம்
நந்தியும்.. அப்போதும்கூட
சிவன் அழைத்திருக்கவில்லை
உள்ளே வா என்று...

புழக்கடை வாசல்
மிதித்துவிட்டதற்காய்
சூடு வாங்கியிருந்த
சுப்பனின் முதலாளியும்
அதிகாலைகள் தவறாமல்
சொல்லிவிடுவார்...
வினைதீர்ப்பாய் விநாயகா...வென..

யோசித்து ஆழ்ந்திருக்கையில்
அம்மா அதட்டினாள்..
நேரத்தோட கோயிலுக்கு போ...
இல்லன்னா சாமி
கண்ணைக் குத்திரும்....

நெடுஞ்சான்கிடையாய்
நீட்டிப்படுத்து... தரிசனங்களுக்காய்
விழிகள் திறந்தேன்...

செட்டியார்களால் கட்டப்பட்டு
அவர்களுக்காய்
பாத்தியப்பட்டது... எனச் சொன்னது
முதற் பிரகாரம்....

சாமி..........
கண்ணைக் குத்தியிருக்கலாம்...

எழுதியவர் : நல்லை.சரவணா (20-Feb-15, 6:08 pm)
பார்வை : 296

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே