அம்மா

(திரைத்துறைக்கேற்ற தீந்தமிழ்ப் பாடல் )

என் தெய்வம் யாரென்றால்
நீதானம்மா! - அம்மா !
நீதானம்மா! - அதை

அறியாமல் போனாலோ
நான் வீனம்மா! - அம்மா !
நீ வான் அம்மா!
(என் தெய்வம்....)

என் உயிரைத் தந்தென்னைக்
காத்தாய் அம்மா! - உன்
உதிரத்தை பருகிநானும்
வளர்ந்தேன் அம்மா!

உனக்காக எதைத் தேடி
வைத்தேன் அம்மா! - உன்
அன்பிற்கு இணையேதும்
உண்டோ அம்மா?
(என் தெய்வம்....)

உனக்காக ஒரு கோயில்
அமைப்பேன் அம்மா - உன்
புகழைத் தினம்பாடி
இசைப்பேன் அம்மா!

ஒருபோதும் உனைநானும்
மறவேன் அம்மா - உன்
அருளாலே இவ்வுலகில்
நிலைப்பேன் அம்மா!
(என் தெய்வம்....)

எனக்காக பகலிரவாய்
உழைத்தாய் அம்மா! - நீ
துயருற்று என்பசியைத்
தீர்த்தாய் அம்மா!

எல்லோரும் எனைப்போற்ற
வளர்த்தாய் அம்மா! - எனைக்
கலங்காமல் கண்போலக்
காத்தாய் அம்மா!
(என் தெய்வம்....)

பொன்வேண்டாம் பொருள்வேண்டாம்
என்றாய் அம்மா! - என்னை
பொன்னாக நெஞ்சுக்குள்
வைத்தாய் அம்மா!

நான்வாழ நல்வழியை
அமைத்தாய் அம்மா! - பெரும்
இருள்நீக்கி ஒளிதன்னைத்
தந்தாய் அம்மா!
(என் தெய்வம்....)

எழுதியவர் : தன்முகநம்பி (21-Feb-15, 10:56 am)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 153

மேலே