மாயம்
பச்சைக்கிளி சொண்டழகி
அவரைப்பூ கண்ணழகி
ஒள்ளி எடை உடலழகி
என் நெஞ்சத்து சொந்தக்காரி
என் கண்ணீருக்கு அர்த்தம்
தந்த பெண்ணேல்லவா நீ?
என் இதயக்காகிதத்தில் நான்
வரைந்த முதல் சித்திரமே!
உணர்வெல்லாம் உன்வசம்
உன் புன்சிரிப்பினால் சோலைக்காட்டு
பொம்மை உயிர்பிக்கிறது. நானோ?
ஜடமாகின்றேன். நீ விலையுயர்ந்த
படிகமென்றால் அதன் விலை
என் உயிர் என்றாலும் கொடுத்து வாங்குவேன்
பிரம்மன் தன் கைவரிசையை
உன்னழகில் காட்டி விட்டான்
ஒவ்வொரு அங்கங்களும்
பல கோடி கவிதைகள். கம்பனில்லை
உன்னழகை கவிதை வரைய
அதற்கு எனக்கு திறமையும் இல்லை
நீ வானிலுள்ள நிலவு என்றால்
உன்னோடு சொந்தம் கொள்ளும்
ஓருயிர் நானல்லவா? பெண்
உள்ளம் மந்திரமோ? அதன் மாயம்
நெஞ்சின் தீபமல்லவோ! அணைத்தாலும்
அணையாது. சுவாசம்
நின்றாலும் வலிக்காமலிருப்பதில்லை