இசைவானின் விடிவெள்ளி

இசைவானின் விடிவெள்ளி
இசை உலகின் அரசியே...! எம்
ஈழத்து இசை இளவரசியே...!
ஜெசிக்கா.
வார்த்தையில் வடிவமெடுத்து. அதை
இசையில் தொடுத்து. இன்று
எம் இதயத்தை பிழிந்துவிட்டாய்.
கடல்தாண்டி வாழ்ந்தாய் கனடாவில்.
உன் கனவோ எம் தாய் நாட்டில்.
மடல் வாங்கத்தான் வந்தாய். நீ
எம் மனங்களில் இடம் கொண்டாய்.
இந்திய தேச இசை ஜாம்பவான்களுக்கு
நீ இன்று சிம்ம சொற்பனம் . இருப்பினும்
ஈழத்தமிழருக்கு உன் வெற்றி அற்பணம்.
ஈராண்டுக்கு முன் நீ இசை யாசித்திருந்தால்
ஈன்றிருப்பான் உனக்காக பல பாக்களை
என் மானசீகக்குரு வாலிபக்கவிஞன் வாலி.
வாழ்த்தியுமிருப்பான் மனதார நீ வாழ.
அற்ப நொடியில் எம்மை
அன்னைதேசம் கொண்டு சென்றாய்
உன் இசைப்பாவால்.
இசைந்தேபோய் பொழிந்தே விட்டோம்
எம் கண்ணீரை உன் வெற்றிப்பாதை நீள.
தங்கையே...!
தங்கம் வென்ற தமிழ் மங்கையே...!
கொடுத்து விட்டாய் ஆதரவற்ற குழந்தைகளுக்கு.
உன் தங்கம்(ம)னதை.
விதைத்து விட்டாய் எல்லோர் மனதிலும்
விடியலின் தேடலை.
இளவலே...!
இசைவானின் விடிவெள்ளியே.
பல பாக்கள் தினம் பாடவேண்டும். நீ
நீடூழி வாழவேண்டும். என்று
உனக்காக வடிக்கின்றேன் இக்கவிப்பாவை
மறக்காமல் படிக்க வேண்டும் உன்
இசை இதழால்....!

எழுதியவர் : (22-Feb-15, 6:31 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 53

மேலே